அனைத்து பாடங்களுக்கும் அடிப்படை ஆய்வு கைபேசி செயலி வடிவமைப்பு

இல்லம் தேடி கல்வி மையங்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அனைத்து பாடங்களுக்கும் அடிப்படை ஆய்வு கைபேசி செயலி வடிவமைப்பு

இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் மாணவர்களின் கற்றல் நிலையினை அறிந்து கொள்வது மிக முக்கியம் என்பதால் அதனை அறிந்து கொள்ளும் விதமாக மாணவர்கள் குறைந்த பட்சம் அடைய வேண்டிய கற்றல் அடைவுகளை அடிப்படையில் அனைத்து பாடங்களுக்கும் அடிப்படை ஆய்வு கைபேசி செயலி ITK (Illam Thedi Kalvi) வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுக்குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அடிப்படை ஆய்வினை தன்னார்வலர்கள் மையத்திற்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் மேற்கொண்டு மே 6க்குள் முடிக்க வேண்டும்.

அடிப்படை ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் அதனை மேற்கொள்ளும் விதம் குறித்து வழிகாட்டுதல்கள் யூடியூப் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து தன்னார்வலர்களும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் வாயிலாக தகவல் தெரிவிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com