வரத்து அதிகரிப்பால் குறைந்தது மாம்பழம், பலாப்பழம் விலை... பழ வியாபாரிகள் தகவல்!!

கோயம்பேடு சந்தைக்கு மாம்பழம், பலாப்பழம் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதையடுத்து விலை குறைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரத்து அதிகரிப்பால் குறைந்தது மாம்பழம், பலாப்பழம் விலை... பழ வியாபாரிகள் தகவல்!!

சென்னை கோயம்பேடு பழ சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழங்களின் வரத்து இருக்கும். சராசரியாக ஒரு நாளைக்கு 150 முதல் 200 லாரிகள் வரத்து இருக்கும்

இந்த நிலையில் கோடைகாலம் தொடங்கியதால் கோயம்பேடு சந்தைக்கு மாம்பழம், பலாப்பழம் மற்றும் தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பழ வியாபாரி ஜெயராமன், கோடைகாலம் தொடங்கி உள்ளது.

இந்த சீசனில் வர கூடிய பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. விலைகளும் குறைவாக தான் இருக்கிறது. ஒரு கிலோ மாம்பழம் 80 ரூபாய்க்கும், பலாப்பழம் 30 முதல் 50 ரூபாய்க்கும், தர்பூசணி பழம் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்கள் விலைகள் மட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. வரக்கூடிய நாட்களில் வரத்து அதிகரித்து விலைகள் இன்னும் குறையும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com