அசானி புயல் எதிரொலி... இன்றும் விமான சேவை பாதிப்பு....

அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக இன்றும் 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்தமான் விமானங்கள் தாமதமாக செல்கிறது.
அசானி புயல் எதிரொலி... இன்றும் விமான சேவை பாதிப்பு....

வங்கக்கடலில் உருவாகி உள்ள அசானி புயல் ஆந்திரா ஒடிசா மாநிலங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அதோடு தமிழகத்திலும் பரவலாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை முதல் லேசான மழை வரை பெய்தது. .

இந்த நிலையில் நேற்று அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் உள்பட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல வேண்டிய 3 விமானங்களும், விஜயவாடா செல்ல வேண்டிய 2 விமானங்களும் ராஜமுந்திரி செல்ல வேண்டிய ஒரு மொத்தம் 6 விமானம் ரத்து செய்யப்பட்டது.

அதுப்போல் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களில் இருந்து வர வேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மேலும் சென்னையில் இருந்து அந்தமானிற்கு காலை 8.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் காலை 11.30 மணிக்கும் காலை 8.30 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் பகல் 1 மணிக்கு காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com