இசைஞானி இளையராஜா அவர்களை பற்றி சாதியை குறித்து இழிவுபடுத்திய பேசிய Evks இளங்கோவன் மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய கோரி அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இளமுருகு முத்து கடந்த 22ம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய EVKS இளங்கோவன் இசைஞானி இளையராஜா அவர்களை சரமாரி விமர்சித்திருந்தார். அவர் பேசும் போது தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்காங்க கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள்.
இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும் தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது என்று தரக்குறைவாக பேசியதோடு மட்டும்ல்லாமல் அவருடைய சாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருக்கிறார்.
மேலும் பணம் வந்துவிட்டால் நீ உயர் சாதி ஆகிவிட முடியாது என்றும் விமர்ச்சித்திருந்தார்.
அதனால் EVKS இளங்கோவனை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம்.
மேலும் அவர் பேசிய ஆடியோவும் இணைத்து காவல்துறை ஆணையரிடம் வழங்கி இருப்பதாகவும் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தெரிவித்தார்.