இந்த ஆண்டு கூடுதலாக 6 லட்சம் ஏக்கர் நெல் பயிர் சாகுபடி

இந்த ஆண்டு கூடுதலாக 6 லட்சம் ஏக்கர் நெல் பயிர் சாகுபடி

6 லட்சம் ஏக்கர் நெல் கூடுதலாக இந்த ஆண்டு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்உள்ள வேளாண் இயக்குநராக அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்ஜெட் குறித்து 15 மாவட்டங்களில் காணொளிக்காட்சி மூலமாகவும் மற்றும் 7 மாவட்டங்களில் நேரடியாகவும் இதுவரை 250 க்கு மேற்பட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது, அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களின் தாக்கமாக தான் இந்த வேளாண் பட்ஜெட் அமையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் 114 லட்சத்து 24 ஆயிரம் ஏக்கர் பயிர் சாகுபடி தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.கரும்பு கொள்முதல் விலை அரசு உயர்த்தி கொடுத்ததையொட்டி கரும்பு சாகுபடி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

மேலும் நெல் பயிர் சாகுபடி இந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கர் கூடுத்தலாக செய்யபட்டுள்ளதாகவும்,53 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
vnews27
www.vnews27.com