வெயில் காலத்தில் மதுவை முற்றிலும் தவிர்க்க வேண்டும்... மா.சுப்ரமணியன் அறிவுறுத்தல்!!

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

சென்னை அபிராமபுரத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் கோடைக்கால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைப்பெற்றது. இந்த கண்காட்சியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று துவங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சென்னை, கருர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. இந்த வெயில் காலத்தில் ஆல்கஹால் முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது தலையில் துணி, தொப்பி ஏதாவது அணிந்து செல்ல வேண்டும், காலணி அணிய வேண்டும். மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை, அவரவர் விருப்பம் பெயரில் அணிந்து கொள்ளலாம், மாணவர்கள் சரியாக வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றினால் நல்லது என்று தெரிவித்தார்.

மேலும் இதில், நீர் ஆகாரங்கள், பழங்கள், கூழ் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் வகையில் நுங்கு உள்ளிட்டவை காட்சி படுத்தப்பட்டுள்ளன. மேலும் சூரிய புற ஊதா கதிர்களின் தாக்கம் குறித்தும் அவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com