சட்டவிரோதமாக மணல் எடுத்தால் நடவடிக்கை... மண்டல குழு தலைவர் எச்சரிக்கை!!

சட்டவிரோதமாக மணல் எடுத்தால் நடவடிக்கை... மண்டல குழு தலைவர் எச்சரிக்கை!!

கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியை புதிதாக பொறுப்பேற்ற மண்டலம் குழு தலைவர் வி.கே.மூர்த்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை மாநகராட்சி மண்டலம் 7க்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு பகுதிகளில் கனமழை பெய்யும் நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்து கொள்கிறது.

இதனை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதற்காக புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை மாநகராட்சி மண்டல 7 குழு தலைவர் வி.கே.மூர்த்தி தலைமையில் மண்டல 7 ஆணையாளர் மற்றும் எண்பத்தி 4வது வார்டு கவுன்சிலர் என அனைவரும் கொரட்டூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அம்பத்தூர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் தொழிற்சாலை கழிவு நீர் ஆகியவற்றை கொரட்டூர் பகுதியின் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் செல்லும் கால்வாயில் மழைக்காலங்களில் நிரம்பி குடியிருப்பு பகுதிகள் செல்வதால் 3 அடி முதல் 4 அடி வரை தண்ணீர் சூழ்ந்து குடியிருப்புவாசிகள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதையடுத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீர் கொரட்டூர் பகுதிக்குச் செல்லாமல் எப்படி எடுத்துச் செல்வது என அதிகாரிகளுடன் மண்டல குழு தலைவர் பி கே மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆய்வு மேற்கொண்டதில் கொரட்டூரில் அதிகபட்சமாக மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் 3 அடி அளவிற்கு குடியிருப்பு பகுதிகளில் வருவதாகவும் ஜீரோ பாயிண்டிலருந்து தொழிற்சாலை கழிவுகள் மற்ற கழிவு நீர் மாசடைந்து வருவதாகவும் இதை கொரட்டூர் ஏரி க்கு அனுப்ப முடியாத சிக்கல் இருந்து வருவதாகவும் அதை எப்படி சரிசெய்வது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

பொதுப்பணித்துறை மெட்ரோ வாட்டர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை அழைத்து நிரந்தரத் தீர்வு காணும் வகையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மண்னோ மனலோ சட்ட விரோதமாக யார் எடுத்தாலும் மண்டல அலுவலர் நடவடிக்கையின் பேரில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com