கள்ளக்காதலுடன் சேர்ந்து குழந்தையை சித்திரவதை செய்யும் தாய்....

கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரண்டரை வயது குழந்தையை பெற்ற தாய் சித்திரவதை செய்ததாக மாமியார் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதலுடன் சேர்ந்து குழந்தையை சித்திரவதை செய்யும் தாய்....

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் குழந்தையை தாயும் அவரோடு சேர்ந்து ஒரு ஆணும் அவ்வப்போது சித்திரவதை செய்து வருவதாக சைல்டு லைனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதையொட்டி, சைல்டு லைன் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து குழந்தையின் பாட்டியிடம் விசாரித்தபோது, திடுக்கிடும் பல்வேறு சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாளின் குடும்பம் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாகர்கோவிலில் குடிபெயர்ந்து விட்டது. கிருஷ்ணம்மாள் வீடுகளில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மகன் மாரிமுத்து ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். மாரிமுத்து முகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து, தற்போது இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது.

ஏழு மாதங்களுக்கு முன்பு திருப்பதிசாரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி கடத்தல் தொடர்பான சம்பவத்தில் மாரிமுத்து மற்றும் அவரது மனைவி முகிலா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நீதிமன்ற காவலில் இருந்து தற்போது முகிலா விடுதலையாகி வந்த நிலையில், மாரிமுத்து சிறையிலேயே உள்ளார்.

முகிலா நீதிமன்றத்திற்கு தனது வழக்கு தொடர்பாக சென்று வந்தபோது நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே மற்றொரு போக்சோ வழக்கில் பிரதியான நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவருக்கும் முகிலாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முகிலாவின் குழந்தைக்கு காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து குழந்தை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

மருத்துவமனையில் தன் குழந்தையை வைத்து பராமரித்து வந்த முகிலாவும் சுயம்புலிங்கமும் அடிக்கடி மருத்துவமனையில் சந்தித்து தனியாக வெகுநேரம் பேசி வந்ததாகவும் அப்போது குழந்தை அழுததால் சுயம்புலிங்கம்ம் முகிலாவும் குழந்தையை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ததாக அந்த வார்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

மாரிமுத்துவின் தாயார் கிருஷ்ணம்மாள் கூறுகையில், அகிலாவுக்கும் சுயம்பு லிங்கத்திற்கு கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு இடையூறாக குழந்தை உள்ளதால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அரசு குழந்தையின் உயிரை காக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை தாயாரும் மற்றொரு நபரும் சித்திரவதை செய்த சம்பவம் நாகர்கோயில் பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com