கடந்த மாதம் 30 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிகையில் கடந்த 2 வாரங்களாக 80 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்து வருகிறது குறிப்பாக இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட உள்ளது. நவீன தக்காளியின் விலை 85-90 வரையும், நாட்டு தக்காளியின் விலை 70/80 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.
அதேபோல ஒரு சில காய்கறியின் விலையில் அதிகரித்து இருக்கிறது அந்த வகையில் பீன்ஸ் ஒரு கிலோ 100/80 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இதனால் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்து அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் தக்காளி மற்றும் காய்கறி விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதி படுகிறார்கள் விற்பனையை பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உள்ளிட்ட விலை உயர்ந்த வரக் கூடிய நிலையில் தற்போது தக்காளியின் விலை 100 ரூபாயை தொட உள்ளது, விலை குறைவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.