சூடானில் தவித்த 7 பேர் சென்னை வந்தனர்...

சூடான் நாட்டில் வேலை இழந்து திரும்ப முடியாமல் தவித்த 7 பேர் சென்னை விமான நிலையம் வந்தனர்
சூடானில் தவித்த 7 பேர் சென்னை வந்தனர்...

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், கோவிந்தராஜன், மணிவண்ணன், முகமது சௌகத் அலி, அருள் சாரங்கபாணி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகன் ஆகியோர் சூடான் நாட்டிற்கு வேலைக்காக சென்றனர்.

ஆனால் அங்கு வேலை இழந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் கஷ்டப்படுவதாகவும் மீட்டு அழைத்து வர வேண்டும் என குடும்பத்தினர் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ்.மஸ்தான் மற்றும் அயலகத் தமிழர் நல ஆணையரக அதிகாரிகள் சூடான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் இனைந்து 7 பேரை சென்னை அழைத்து வர நடவடிக்கை எடுத்தது.

7 பேரின் விமான டிக்கெட் செலவுகளை தமிழக அரசு ஏற்று அழைத்து வந்தது. சூடானில் இருந்து விமானம் முலம் சென்னை விமான நிலையம் வந்தனர்.

7 பேரையும் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல ஆணையரக துணை கமிஷனர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் வரவேற்று அரசின் செல்வில் வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com