தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினம் என்பதால் இசசம்பவத்தில் உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினம்

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றோடு (மே 22) 4 ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில் துப்பாக்கி சூடுசம்பவத்தின் 4-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு குமரெட்டியார்புரம் பகுதியில் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி, சில்வர்புரம், மடத்தூர், பாத்திமா நகர், காந்திநகர், லயன்ஸ் டவுன், பூபாலராயபுரம், மீன்பிடி துறைமுகம், மட்டக்கடை போன்ற பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதுபோல் மாவட்டம் முழுவதும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

துப்பாக்கி சூடுசம்பவத்தின் 4-வது ஆண்டு நினைவுநாளையொட்டி, தூத்துக்குடியில் 2,500 போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த பாதுகாப்பு பணியில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, ராமநாதபுரம் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 9 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 127 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வசவப்பபுரம், செய்துங்கநல்லூர், பெரியதாழை, சங்கரன்குடியிருப்பு, வேம்பார், கோடாங்கிப்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பருத்திக்குளம், சென்னமரெட்டியாபட்டி மற்றும் சவலாப்பேரி உட்பட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு நகரின் மையப்பகுதியில் நினைவகம் அமைக்க வேண்டும்” போடப்பட்ட வழக்குகள் அனைத்து ரத்து செய்யப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு குமரெட்டியாபுரத்தில் கிராம மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com