நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS, ஆயுஷ் படிப்புகளில் சேர NEET - UG தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வியாண்டுக்கான ( 2022-23 ) நீட் தேர்வு வரும் ஜூலை 17ல் நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை நடைபெற்றது.
தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர் இருப்பதாகவும், கடந்த ஆண்டை விட 2,57,562 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை எழுத 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், தமிழ் மொழியில் நீட் எழுத 31,803 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இருக்கும் 91,415 MBBS இடங்கள், 26,949 BDS இடங்கள், 50,720 ஆயுஷ் இடங்கள் என்று 1,69,084 இடங்களுக்கு 18,72,339 பேர் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளது.