விடுதலையான 12 மீனவா்கள் சென்னை வருகை

விடுதலையான 12  மீனவா்கள் சென்னை வருகை

தமிழக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை ராணுவம் கடந்த மார்ச் மாதம் 12 மீனவர்களை கைது செய்தது.

தகவலறிந்த தமிழக முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சீரிய முயற்சியால் மத்திய அரசின் உதவியுடன் இலங்கை சிறையில் இருந்து 12 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையில் இருந்து தமிழக மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை இலங்கை தலைநகரம் கொழும்பில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த 12 மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர் அதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

அப்போது மீனவர்களிடம் செய்தியாளர்கள் கேட்ட போது கடந்த மார்ச் மகன் இலங்கை ராணுவத்தால் கைது செய்தனர் தங்களால் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளானோம் என்றும் தெரிவித்தனர்.

பாஜக மாநில மீன்வளத்துறை தலைவரான நீலாங்கரை என்று முனுசாமி மீனவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் பின்னர் ஊக்கத்தொகையை மீனவர்களுக்கு வழங்கினார்

சென்னை விமான நிலையத்திலிருந்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வைக்கப்பட்ட வாகனத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இலங்கையிலிருந்து வந்த 12 மீனவர்களையும் எந்த செலவும் இல்லாமல் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com