கள்ள சந்தையில் 1100 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்… 2 பேர் கைது!!

சென்னை அம்பத்தூர் அருகே சட்டவிரோதமாக கலப்பட எரிப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து 1100 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ள சந்தையில் 1100 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்… 2 பேர் கைது!!

சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கம் ஆவடி திருநின்றவூர் ஆகிய இரு பகுதிகளிலும் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் குடேன்களில் கள்ள சந்தையில் கலப்பட ஆயில் விற்கப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த 2 குடோன்களில் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது 16,000 லிட்டர் கருப்பு ஆயில், சுமார் 2400 லிட்டர் LDO ஆயில், மேலும் 1100 லிட்டர் பெட்ரோல் மற்றும் 200 லிட்டர் டீசலை வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதை அடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மைக்கேல் சூசை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜான்சன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com