அரசு அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் பணி நேரங்களில் செல்போனை பயன்படுத்த கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஆவடி காவல் ஆணையர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இந்த சுற்றறிக்கையில் மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் அலுவலக நேரத்தின் போது செல்போனை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதி 1973இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவசர காலத்தில் அனுமதியின் பேரில் செல்போன் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.