காவல்துறையினர் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை

பெண்களை விசாரிப்பதில் காவல்துறையினர் அலட்சியம் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை வழங்கியுள்ளது
காவல்துறையினர் அலட்சியம் காட்டினால்  கடும் நடவடிக்கை

காவல்துறையினர் விசாரணையின் போது பெண்கள் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனரா? எனவும் அப்படி ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக மக்களவை உறுப்பினர் மகாபலி சிங் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய், 01.04.2021 முதல் 08.03.2022 வரையிலான காலகட்டத்தில் போலீசார் அல்லது நீதிமன்ற காவலில் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்ததாக எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களை விசாரணை செய்யும்போது அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் துறை ரீதியான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை வழங்கியுள்ளதாகவும் காவல்துறை மற்றும் மாநிலத்தின் பொது ஒழுங்கு ஆகியவை மாநிலங்களின் வரம்பு எனவும் மத்திய உள்துறை இணை அமைச்சர் தன்னுடைய விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com