எவரெஸ்ட் மலையில் ஏற தகுதி பெற்ற முதல் தமிழ் பெண்... யார் அவர்?

Mount Everest
Mount Everest

எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு செங்கல்பட்டை சேர்ந்த தமிழ் பெண் தகுதி பெற்றுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வி. இவர் கடந்த மகளிர் தினத்தன்று திருப்பெரும்புதூர் அருகே 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி முதல் சாதனை படைத்தார்.

அதேபோல் இமாசலப் பிரதேச மாநிலத்தில் குலாங் கிராமத்தின் மலை உச்சியிலிருந்து தன் இளைய மகள் வித்திஷாவை முதுகில் கட்டிக்கொண்டு, மூத்த மகள் தக்க்ஷாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு,மூவரும் கண்களை கட்டிக்கொண்டு 165 அடி உயரத்தை 55 வினாடிகளில் இறங்கி இரண்டாவது சாதனை படைத்தனர்.

. மேலும் மூன்றாவது உலக சாதனையாக கடந்த குடியரசு தினத்தன்று சென்னை வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவதாரத்தில் 3 மணி நேரம் குதிரை மீது அமர்ந்து 1389 அம்புகள் துல்லியமாக எய்து 87% பெற்று உலக சாதனை படைத்தார்.

இந்த நிலையில் முத்தமிழ் செல்வி காஷ்மீர் லடாக் பகுதியில் உள்ள சுமார் 5500 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு தணிப்பெண்ணாக சென்று சாதனை படைத்துள்ளார். இதனால் அடுத்த மாதம் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு தகுதியை முத்தமிழ்ச் செல்வி பெற்றுள்ளார்.

எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு தகுதி பெற்ற முதல் தமிழ் பெண் என்ற பெருமையை முத்தமிழ் செல்வி பெற்றுள்ளார். இதையடுத்து டெல்லியில் இருந்து சென்னை வந்த முத்தமிழ் செல்விக்கு விமான நிலையத்தில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்தமிழ் செல்வி, இமயமலையில் ஏறுவதற்கான பயிற்சியை தற்போது முடித்து வந்து உள்ளேன். எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. முதல் தமிழ்ப் பெண்மணியாக எவரெஸ்ட் மலை ஏறி சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்.

இந்த சாதனையை செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டுமெனவும் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com