தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு குறுந்தகவல்

இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு குறுந்தகவல் மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு குறுந்தகவல்

தமிழகத்தில் இன்று 26 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவது இயக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது இன்று 26 தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது, கடந்த 25 வாரங்கள் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 3.90 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றார்.

மேலும், தமிழகத்தில் 50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.34 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக தெரிவித்த அவர், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு குறுந்தகவல் மூலம் தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது வரையும் யாரும் தடுப்பூசி செலுத்த வில்லை, ஆனால் இன்று அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 12-14 வயதுடையவர்கள் 21.21 லட்சம் பேர் உள்ள நிலையில் ஒரு வாரத்தில் 10.91 லட்சம் பேர் 51.4% தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதேபோல, 15-18 வயதுடையவர்களில் 28,58,680 பேர் 85.44% முதல் தவணையும், 20,37,866 பேர் 60.90% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும்,18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 92.10% முதல் தவணையும், 75.50% இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தி இருப்பதாக கூறினார்.

மேலும், சென்னையில் 99 % பேர் முதல் தவணையும், 81% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் 27 நகராட்சிகளில் 100% தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும், அதேபோல தமிழகத்தில் கடலூர், கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாகவும், 100 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க இருக்கிறோம் என்றார். இந்நிகழ்வில் அமைச்சர் த.மோ அன்பரசன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com