
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் பல்வேறு தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைப்பதாகவும் , மாணவர்கள் பெற்றோர்களை தர குறைவாக பேசுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கக்கூடாது , பெற்றோர்களை தரக்குறைவாக பேசக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பள்ளிகள் உறுதியளிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
அதில், கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற உத்தரவை பள்ளிகள் முறையாக பின்பற்றுகிறதா? என்பது குறித்து உறுதிமொழி சான்று தர அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத யாரையும் வெளியில் நிற்கவைக்கவில்லை, அவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசவில்லை என்று சான்றிதழ் தர ஆணை கொடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் தந்தும் அந்த பள்ளிகள் மீது ஏதும் புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.