ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவு

உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த ரஷ்யாவுக்கு  உத்தரவு

உக்ரைன் மீது ரஷியா இன்று 21-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், போரை நிறுத்த ரஷ்யாவிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச நீதிமன்ற உத்தரவு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ரஷியாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நீதிமன்ற உத்தரவிற்கு ரஷியா உடனடியாக இணங்க வேண்டும் என கேட்டுக் கொண்ட உக்ரைன் அதிபர், இந்த உத்தரவைப் புறக்கணித்தால் ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com