அதிகரித்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலை....

சென்னையில் இன்று ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 109 ரூபாய்யை நெருங்கி விட்டதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
அதிகரித்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலை....

சென்னையில் தொடர்ந்து ஒருவார காலமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்தினால் தொடர்ந்து இந்த பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 75 காசுகள் அதிகரித்து 108 ரூபாய் 96 காசுகளுக்கும், டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 04 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர், கடந்த ஒரு வாரகாலமாக அதிகரித்து வரும் இந்த விலையேற்றத்தினால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயத்தில் உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை விலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், இதனால் நடுத்தரவர்க்க மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com