நீக்கப்படுகிறது M.Phil., படிப்பு...

நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டில் M.Phil., படிப்பு நீக்கபடுவதாக பல்கலைக்கழக மானியக்குழுவான UGC அறிவித்துள்ளது.
நீக்கப்படுகிறது M.Phil., படிப்பு...

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழுவான UGC வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய தேசிய கல்வி கொள்கை படி

கற்பித்தல் பணிக்கு M.Phil., தகுதியானது இல்லை என்பதால் அது நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து M.Phil., படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாக குறிப்பிட முடியாது எனவும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த M.Phil., படிப்புகள் செல்லும் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே நடப்பு 2021-22-ம் கல்வியாண்டு முதல் M.Phil., படிப்பு கிடையாது என்று மாநில பல்கலைக்கழகங்கள் அறிவித்து, பின்னர் திமுக அரசு அமைந்த உடன் M.Phil., படிப்பு கற்றுத்தரப்பட்டு வரும் நிலையில், வரும் கல்வியாண்டு முதல் M.Phil., படிப்பு நீக்கப்படுவதாக பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com