பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 54 காசுகள் உயர்வு

சென்னையில், பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 54 காசுகள் உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி வருகின்றன. இந்தநிலையில் உக்ரைன்-ரஷ்யா மோதலால் உலக அளவில் எரிபொருள் விலை உயர்ந்து வருகின்றன. எனினும் இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்து வந்தது. இதற்கு 5 மாநில சட்டமன்றத் தேர்தல்தான் காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில், 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில் இருந்து பெட்ரோல் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 22-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களிலும் விலை உயர்வு தொடர்ந்த நிலையில், பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 105 ரூபாய் 94 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோன்று இன்று டீசல் விலை லிட்டருக்கு 67 காசுகள் அதிகரித்து 96 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல, கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 54 காசுகளும், டீசல் விலை 4 ரூபாய் 57 காசுகளும் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com