தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்...

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பொல், கோடை காலம் தொடங்கிய பிறகும், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. வங்கக் கடல் பகுதிகளில் இந்த 4 நாட்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com