ஒரு ஆண்டில் நாடு முழுவதும் 30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதாக தகவல்

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு, 3 கோடி மரங்கள் நடப்பட்டு உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
ஒரு  ஆண்டில் நாடு முழுவதும் 30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதாக தகவல்

நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் பொது உள்கட்டமைப்பு திட்டங்களின் கட்டுமானத்திற்காக இதுவரை வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை தொடர்பாகவும், காடு வளர்ப்பின் மூலம் இதுவரை எவ்வளவு மரங்கள் நடப்பட்டு உள்ளது? அதற்கு செலவான தொகை தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை துறை அமைச்சர் பூபிந்தர் யாதவ்,

பல்வேறு சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவுகளின் படி மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் அரசுகள் வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் 2020-2021ம் ஆண்டில் நாடு முழுவதும் பொது திட்டங்களை செயல்படுத்துவதற்கும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் இடையூறாக இருந்த 30,97,721 மரங்களை வெட்டுவதற்கு உரிய அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக நாடு முழுவதும் 3,64,87,665 மரங்கள் நடப்பட்டு உள்ளதாகவும் இதற்கு ரூபாய் 358.87 கோடி செலவானதாக மத்திய அரசின் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com