இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு முப்படை மரியாதை !!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு - டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்-ல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரண்டாவது நாளான இன்று டெல்லியில் பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்துகிறார்;

இன்று காலை டெல்லி ராஷ்டிரபதி பவன் இல்லத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ராணுவம்,கடற்படை மற்றும் விமானப்படை என முப்படைகளின் மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை வரவேற்று, இந்திய அரசின் உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்தியா-இங்கிலாந்து இடையிலான உறவு எப்போதும் இல்லாத அளவிற்கு வலுவடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அரசு தரப்பிலான அதிகாரிகள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மார்பளவு காந்தி சிலை மற்றும் காந்தியடிகளின் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து காலை 10.10 மணிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார். இதனைத் தொடர்ந்து டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காலை 11.25 மணிக்கு சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது இந்தியா-இங்கிலாந்து இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com