அனைத்து இந்திய மொழிகள், கலாச்சாரங்களையும் சமமாக கருதுவதே மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளதாக கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தினாலும், சென்னை ஐ.ஐ.டி., தன்னாட்சி அதிகாரம் உடைய நிறுவனம் என்பதால், இறுதி முடிவை ஐ.ஐ.டி. நிர்வாகமே எடுக்கும்.
அனைத்து அரசு, பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கட்டாயம் என்று கடந்த டிசம்பரில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன் பின்னர் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிக்கப்பட்ட நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.