தமிழக ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை ராணுவம் கடந்த மார்ச் மாதம் 19 மீனவர்களை கைது செய்தது.
தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முயற்சியால் மத்திய அரசின் உதவியுடன் இலங்கை சிறையில் இருந்து 19 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இலங்கையில் இருந்து தமிழக மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலையம் வந்த 19 மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு இரண்டு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். அப்போது மீனவர்கள் திடீரென எங்களுக்கு இலங்கையில் சரியாக உணவு தரவில்லை. பாம்புகள் இருக்க கூடிய பகுதியில் தங்க வைத்தனர்.
இலங்கையில் தமிழக மாணவர்கள் மீது ஒன்றரை கோடி வரை அபராதம் விதிப்பதை ஏற்க முடியாது. இதை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு தூதரக அதிகாரிகளும் ஒத்துழைக்கவில்லை. தமிழக மீனவர்களை கொடுமைப்படுத்தும் இலங்கைக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க கூடாது. ஒரு ரூபாய் கூட தரக்கூடாது என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.