இமாச்சல் பிரதேச மாநிலத்தின் மலை சிகரங்களில் பனி பொழிவு

இமாச்சல் பிரதேச மாநிலத்தின் மலை சிகரங்களில் பனி பொழிவு, ரம்மியமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இமாச்சல் பிரதேச மாநிலத்தின் மலை சிகரங்களில் பனி பொழிவு

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான குளிர் நிலவும். மார்ச் மாதத்திற்கு பிறகு சுட்டரித்த வெயில் காரணமாக டெல்லி உட்பட மலைப்பிரதேசங்களிலும் கடுமையான வெப்பம் பதிவானது. குறிப்பாக வரலாறு காணாத வகையில் தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பம் பதிவானது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று இரவு முதல் சூறைக்காற்றுடன் குளிர்ந்த மழை பெய்து வரும் நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் தர்மஷாலாவில் உள்ள தௌலதார் மலைத்தொடரின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவு காரணமாக ரம்யமான சூழல் நிலவுவதால் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக அதிகரிக்கும் என ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் சுற்றுலாக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கோடை காலத்தில் குளிர்ந்த நிலை இருந்தாலும் பனிப்பொழிவு பெரிய அளவில் இருக்காது; ஆனால் இம்முறை பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளதால் கோடை காலம் ரம்யமாக இருக்கும் என ஹிமாச்சல் வாழ் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com