ரயில்வே அறிவிப்பு: வைகை, குருவாயூர் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்....

ரயில்வே அறிவிப்பு: வைகை,  குருவாயூர் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்....

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில்,

திருச்சி கோட்ட பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக மே 11 மற்றும் 25 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்படும் மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) மற்றும் மே 11 மற்றும் 25 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து புறப்படும் சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (16127) ஆகியவை விருத்தாசலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு உளுந்தூர்பேட்டை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக நெய்வேலி, கடலூர், பண்ருட்டி வழியாக மாற்றுப்பாதையில் விழுப்புரம் சென்று சேரும்.

மேலும் மே 25 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) சென்னையிலிருந்து மாலை 03.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 04.05 மணிக்கு 20 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com