டெல்லியில் பள்ளிகளை பார்வையிடுகிறார் பஞ்சாப் முதலமைச்சர் !!

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் இன்று டெல்லி அரசு பள்ளி மற்றும் மொஹல்லா கிளினிக்-களை பார்வையிடுகிறார்; சமீபத்தில் தமிழக முதலமைச்சரும் டெல்லி அரசு பள்ளியை பார்வையிட்டார்.
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்

சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் சேர்ந்து டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை பார்வையிட்டு அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த அனுபவத்தை கேட்டறிந்தார்.

இதேபோல் இன்றைய தினம் பஞ்சாப் முதலமைச்சர் பகவாந்த் மான் டெல்லியில் அரசுப் பள்ளி மற்றும் மொஹல்லா கிளினிக்களை பார்வையிடுகிறார்.

பஞ்சாப் முதலமைச்சராக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் பகவந்த் மான் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கிளினிக்குகள் போல பஞ்சாப் மாநிலத்திலும் விரைவில் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.

குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு ஈடான கல்வியை அரசுப் பள்ளிகளிலும் வழங்குவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து மக்களுக்கும் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கிடைக்கக்கூடிய வகையில் அனைத்து இடங்களிலும் இலவச கிளினிக்-கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த கட்டமைப்பை தொடங்குவதற்காக டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கிளினிக் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்பை இன்று அமைச்சர்களுடன் சேர்ந்து பார்வையிட உள்ளார்.

இந்நிலையில் அந்த கட்டமைப்பை தொடங்குவதற்காக டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கிளினிக் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்பை இன்று அமைச்சர்களுடன் சேர்ந்து பார்வையிட உள்ளார்.

கல்காஜி பள்ளியில் புதிய நீச்சல் குளத்தை திறந்து வைக்க உள்ளனர். இவை தவிர கிழக்கு டெல்லியில் உள்ள தில்ஷாத் கார்டனில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள சுகாதார வசதிகளையும் பஞ்சாப் முதலமைச்சர் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிகழ்வின் போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதலமைச்சரும் கல்வித் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் உடன் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com