பிரதமர் மோடி இன்று குஜராத்  பயணம் !!

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம் !!

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து, மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்திற்கு செல்கிறார்.

இன்று முதல் வரும் 20ம் தேதி வரை 3 நாட்கள் குஜராத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

முதலாவதாக இன்று மாலை காந்திநகரில் உள்ள பள்ளிகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் பார்வையிடுகிறார்.

இதனை தொடர்ந்து, நாளை காலை பனஸ்கந்தாவின் தியோதரில் உள்ள பனஸ் பால் பண்ணை வளாகத்தில் பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி, பிற்பகல் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இதனையடுத்து, நாளை மறுதினம், காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

அதன் பின்னர், டாஹோத்தில் சுமார் 22 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com