45 நாட்களுக்கு பிறகு குறைந்தது பெட்ரோல் டீசல் விலை ... வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!!

மத்திய அரசின் கலால் வரி குறைப்பை தொடர்ந்து சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. பெட்ரோல், டீசல் விலையில் 45 நாட்களுக்கு பின்னர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 45 நாட்களுக்கு பிறகு குறைந்தது பெட்ரோல் டீசல் விலை ... வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!!

நாட்டில் பெட்ரோல், டீசல் மிக கடுமையாக உயர்ந்து வந்தது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயர்வடைந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு நேற்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ8.22 குறைந்து ரூ102.63க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேப்போல் 1 லிட்டர் டீசல் விலை ரூ.6.70 குறைந்து ரூ.94.24 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 45 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சி அளித்தாலும், மேலும் விலையை குறைத்தால் மட்டுமே அன்றாட வாழ்க்கைக்கு ஏதுவாக இருக்கும் என்பதே வாகன ஓட்டிகள் பலரின் கருத்தாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com