இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 183-ஐ விட குறைவாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 45 ஆயிரத்து 527 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 928 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 11 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.
இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 186 கோடியே 72 லட்சத்து 15 ஆயிரத்து 865 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.