யானைகள் உயிரிழப்பை தவிர்க்க மெகா திட்டம்... தெற்கு ரயில்வே தகவல்!!

யானைகள் உயிரிழப்பை தவிர்க்க மெகா திட்டம்... தெற்கு ரயில்வே தகவல்!!

யானைகள் உயிரிழப்பை தவிர்க்க, யானைகள் கடக்கும் பாதைகளில் குகை போன்ற அமைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ள நிலையில் இடங்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்யா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக விபத்து நேரும் கோவை - பாலக்காடு உள்ளிட்ட இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டு வழித்தடங்களிலும் உள்ள ரயில் பாதையை உயர்த்தி, யானைகள் கடக்க ஏதுவாக குகை போன்ற அமைப்பை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒலி எழுப்பும் விளக்குகள், பிரத்யேக நடைபாதை, சென்சார் வசதிகளையும் செயல்படுத்தி யானைகள் உயிரிழப்பை தவிர்க்க மெகா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. யானைகள் உயிரிழப்பை தவிர்க்க, யானைகள் கடக்கும் பாதைகளில் குகை போன்ற அமைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்த நிலையில், இடங்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதர இடங்களையும் அடையாளம் கண்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே அசாம் உள்ளிட்ட இதர மாநிலங்களிலும் யானைகள் கடக்கும் வழித்தடங்களை கண்டறியும் பணிகளில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com