எல்.ஐ.சி பங்கு விற்பனை- ரூ.42,500 கோடி இழப்பீடு

தேசிய பங்கு சந்தையில் எல்ஐசி பங்குகளின் விற்பனை தொடங்கிய நிலையில், முதல் நாளில் 42 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எல்.ஐ.சி பங்கு விற்பனை- ரூ.42,500 கோடி இழப்பீடு

நஷ்டத்தில் இயங்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்று லாபம் ஈட்ட திட்டமிட்ட மத்திய அரசு, அதுதொடர்பான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.

மேலும் ஒரு பங்குக்கு 949 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை கடந்த மே 6ம் தொடங்கியது.

இந்தநிலையில் அந்நிறுவனத்தின் மொத்த பொது பங்குகளையும் பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டியதால் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு,

மத்திய அரசுக்கு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.

இந்தநிலையில் இந்த பங்குகள் அனைத்தும் தேசிய பங்கு சந்தையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு, விற்பனை தொடங்கியுள்ளது.

இதில் பங்குகள் அனைத்தும் வாங்கிய விலையிலிருந்து 8.11 சதவீதமாக குறைவாகவே 872 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

இதேபோல் மும்பை பங்கு சந்தையில் 867 ரூபாய்க்கு ஒரு பங்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால் முதலீட்டாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதனிடையே முதல் நாளான இன்று, பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களுக்கு 42 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com