சபர்மதி ஆசிரமத்திற்கு வந்தது பெரிய பாக்கியம் - இங்கிலாந்து பிரதமர் !!

சபர்மதி ஆசிரமத்திற்கு வந்தது மிக பெரிய பாக்கியம்! - இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சபர்மதி ஆசிரமத்தின் வருகை பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து நட்சத்திர விடுதி வரை வழிநெடுகிலும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மேலும் குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இங்கிலாந்து பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள "சபர்மதி ஆசிரமத்தை" பார்வையிட்டார்.

முன்னதாக அங்கு வந்தடைந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆசிரம நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்; தொடர்ந்து ஆசிரமத்தையும் ஆசிரமத்தில் உள்ள காந்தியடிகளின் அறிய புகைப்படங்கள் மற்றும் வரலாற்று புகைப்படங்களை காண்பித்து விளக்கினர்.

இதைத்தொடர்ந்து சபர்மதி ஆசிரமத்தின் முகப்பில் உள்ள காந்தியவாதிகளின் அடையாளமாக கருதப்படும் 'கை ராட்டையை' போரிஸ் ஜான்சன் சுழற்றி பார்த்தார்.

தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் "அசாதாரண மனிதரின் ஆசிரமத்திற்கு வந்தது மிக பெரிய பாக்கியம்; உலகத்தை சிறப்பாக மாற்ற காந்தியடிகள் கையாண்ட உண்மை மற்றும் அகிம்சை கொள்கைகளை பற்றி தெரிந்து கொள்ளவதற்கு கிடைத்த மகத்தான நேரம்" என எழுதி அதில் தனது கையெழுத்தை பதிவு செய்தார்.

இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மகாத்மா காந்தியடிகள் எழுதிய புத்தகமான "GUIDE TO LONDON" எனும் புத்தகத்தையும், காந்தியின் சீடரான மேடலின் ஸ்லேட் எழுதிய "THE SPIRTIS PILGRIMAGE" எனும் புத்தகங்கள் போரிஸ் ஜான்சனுக்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com