இந்தியாவில் உயர்கல்வி... வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு!!

இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து படிப்புகளை வழங்கக்கோரி UGC அழைப்பு விடுத்துள்ளது.
UGC
UGC

இந்தியாவில் உயர்கல்வி வழங்க சீனா, பாகிஸ்தான் தவிர இதர நாடுகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு விடுத்துள்ளது. மேலும் கூட்டு முயற்சியில் படிப்புகளை வழங்குவதற்கு தகுதியான இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலையும் UGC வழங்கியுள்ளது.

இதுமட்டுமின்றி இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் கிளைகளை வெளிநாடுகளில் அமைக்கவும் UGC உதவி செய்துள்ளது. இதனிடையே இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேர இதுவரை 50,000 வெளிநாட்டு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com