புதுச்சேரியில் சுகாதார திருவிழா நடைபெற்றது. இதில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, ஆயிஷ் மான் பாரத் திட்டத்தில் புதுச்சேரி தான் அதிக அளவில் பயன் பெற்றுள்ளனர். கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வரும் முன் காப்பாதே தமிழரின் பண்பாடு, யோகா உலகம் முழுவதும் பேசப்படுவதற்கு காரணம் பிரதமர் மோடி, மனநலத்தையும் உடல்நலத்தையும் போனுவது யோகா. புதுச்சேரியில் மருத்துவமனைகள் மேம்பட்டு இருந்தாலும் இன்னும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். புதுச்சேரியில் உள்ளவர்கள் வெளி மாநிலத்திற்கு சிகிச்சைக்கு செல்லவில்லை.
மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தான் புதுச்சேரிக்கு மருத்துவ சேவைக்கு வர வேண்டும். புதுவையில் மருத்துவ சேவை சிறந்து விளங்குகிறது. ஆரோக்கியம் சுகாதாரத்தில் இன்னும் மேம்பட வேண்டும் என்று தெரிவித்தார்.