தமிழகத்தில் பிரதமர் துவக்கவிருக்கும் திட்டங்களின் விவரம் !!

சென்னையில் 2ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி, 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி.

256 கோடி ரூபாய் செலவில் 30 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்

450 கோடி ரூபாய் செலவில் 90 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மதுரை தேனி அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையை துவக்கி வைக்க உள்ளார்

850 கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணூர் செங்கல்பட்டு இடையே 115 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம்,

910 கோடி ரூபாய் மதிப்பிலான திருவள்ளூர்- பெங்களூர் இடையேயான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டங்கள் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடாகா மாநிலங்கள் பயன்பெறும்

மேலும் சென்னை கலங்கரை விளக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தில் 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 152 வீடுகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

14 ஆயிரத்து 870 கோடி ரூபாய் செலவில் சென்னை பெங்களூரு இடையே 262 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ள அதிவிரைவுச்சாலை திட்டம்

5 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பில் 21 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ள சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான பறக்கும் சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்

4590 கோடி ரூபாய் மதிப்பில் நெரலூரு தருமபுரி இடையே 94 கிலோமீட்டர் நீள 4 வழிச்சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம் இடையில் 31 கிலோமீட்டர் நீளமுள்ள 2 வழிச்சாலை அமைக்கும் திட்டம்

சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்களை ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்

சென்னையில் ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் பன்னடுக்கு போக்குவரத்து பூங்காவுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com