கொரோனா.
கொரோனா.

கடந்த 24 மணி நேரத்தில் 2,541 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : மத்திய அரசு தகவல் !!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,541 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு; நாடு முழுவதும் 16,522 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதாக மத்திய அரசு தகவல்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 2,541 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது நேற்றைய கொரோனா பாதிப்பை காட்டிலும் சற்று குறைவாகும். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,862 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

மொத்தமாக இதுவரை 4,25,21,341 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 30 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,22,223 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 16,522 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.75 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 3,64,210 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 1,87,71,95,781 டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.

தேசிய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து நாளை மறுநாள் அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

logo
vnews27
www.vnews27.com