டெல்லி வீரர் மிச்சேல் மார்ஷுக்கு கொரோனா தொற்று உறுதி !!

ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் மார்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 மிச்சேல் மார்ஷு
மிச்சேல் மார்ஷு

டெல்லி அணியின் பிரியோதெரபிஸ்ட் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, மிச்சேல் மார்சுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, நாளைய தினம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்காக புனே புறப்பட தயாராக இருந்த டெல்லி அணியின் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மிச்சேல் மார்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், அவரது உடல் நிலையை டெல்லி அணியின் மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவத்துள்ளது.

தொடரின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி, அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் மொத்த அணியுமே 5 நாட்களுக்கு பயோ பபுள் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.

இதனால், பஞ்சாப் அணிக்கு எதிராக டெல்லி அணி மோதவிருந்த நாளைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com