8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு : ராகுல்காந்தி விமர்சனம் !!

பிரதமர் நரேந்திர மோடி 8 ஆண்டுகளாக பேசியதன் விளைவாக தற்போது நிலக்கரி கையிருப்பு 8 நாட்கள் மட்டுமே உள்ளது என்று காங். எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு  : ராகுல்காந்தி விமர்சனம் !!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலில் ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 8 ஆண்டுகளாக பேசியதன் விளைவாக தற்போது நிலக்கரி கையிருப்பு 8 நாட்கள் மட்டுமே உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்பட்டால் சிறு, குறு தொழில் பாதிக்கப்பட்டு வேலையின்மை அதிகரிக்கும். வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்தி, மின் உற்பத்தி நிலையங்கள் இயங்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் மின்வெட்டு அதிகம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மின்தேவையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனிடையே நிலக்கரி தட்டுப்பாடு குறித்து ஒன்றிய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், நாடு முழுவதும் பல மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com