22 மத்திய பல்கலைக்கழகங்கள் CUET - PG தேர்வை ஏற்க மறுப்பு

22 மத்திய பல்கலைக்கழகங்கள் CUET - PG தேர்வை ஏற்க மறுப்பு

22 மத்திய பல்கலைக்கழகங்கள் CUET - PG தேர்வை ஏற்க மறுத்துள்ளன.

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் M.A., M.Sc., M.Com., உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர இதுவரை தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் ஒரே நுழைவுத் தேர்வாக CUET - PG என்ற பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று UGC அறிவித்தது.

இதையடுத்து வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) PG மாணவர் சேர்க்கைகாக, CUET - PG தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து, அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவையும் UGC தொடங்கியது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள 54 மத்திய பல்கலைக்கழகங்களில் டெல்லி JNU, புதுச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 32 மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே CUET - PG தேர்வின் படி மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளதாகவும், 22 மத்திய பல்கலைக்கழகங்கள் CUET - PG தேர்வை வரும் கல்வியாண்டில் ஏற்க மறுத்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் 22 பல்கலைக்கழகங்களும் CUET - PGதேர்வை ஏற்கும் என்று நம்புவதாகவும் UGC தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

CUET - PG தேர்வுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் பல்கலைக்கழகங்களும் அதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com