மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.கஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை மாநகராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.கஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை மாநகராட்சி மண்டலம் 5 உட்பட்ட நந்தனம் செனடாப் சாலை மூப்பனார் பாலம் அருகே 870 மீட்டர் நீளத்தில் 2.6 கோடி செலவிலும் ,சீதம்மாள் காலனி சி வி ராமன் சாலையில் 25.88 கோடி செலவிலும் மற்றும் மேற்கு மாம்பலம் ஆற்காட் சாலை  பகுதிகளில் 9.5 கோடி செலவிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளும் மற்றும் புதிதாக மேற்கொள்ளப்படும் புரனமைப்பு பணிகளையும்  முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழை தீவிரம் காட்டியதையடுத்து சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்த நிலையில் வருகின்ற பருவமழைக் காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் நீர் தேங்கிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ரூபாய் 310 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி உட்புறத்தில் அமைந்துள்ள 2078 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அந்தந்த மண்டல அலுவலர் களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com