இம்ரான் கான் ஆட்சி: நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நாளை மறுதினம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் ஆட்சி:  நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல் வாதியாகி பிரதமராக ஆட்சியைப் பிடித்தவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் இம்ரான் கான். இந்த நிலையில் இவரது கட்சி மற்றும் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாததால், ஆளும் கூட்டணியில் இருந்து முத்தாஹிதா குவாமி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -குவைட் மற்றும் பலுசிஸ்தான் அவாமி ஆகிய ட்சிகள் வெளியேறின. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 171 உறுப்பினர்கள் ஆதரவு தேவைபட்ட நிலையில், இம்ரான் கட்சிக்கு 155 உறுப்பினர்களும், 6 கூட்டணி கட்சிகளை சேர்ந்த 21 உறுப்பினர்களும் ஆதரவு இருந்தது.

இந்த நிலையில், சில கூட்டணி கட்சிகளின் விலகல் முடிவு இம்ரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது சொந்த கட்சியிலேயே இம்ரானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவரும் 24 எம்.பி.,க்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் எனவும் அறிவித்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தான் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என உறுதியுடன் இருந்தாலும், பெரும்பான்மையை இழந்துள்ளதால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அடுத்த பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஆட்சி கவிழ்ந்தால் அடுத்து உடனடியாக தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com