தற்கொலை எண்ணம் வந்தால் 1098 எண்ணில் ஆலோசனை பெறுக!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிறிய பிரச்சனைகளுக்காக தற்கொலை முடிவுக்கு செல்லக்கூடாது என அனைத்து மாணவர்களுக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.
தற்கொலை எண்ணம் வந்தால் 1098 எண்ணில் ஆலோசனை பெறுக!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி போன்ற மோசமான முடிவுகளை எடுத்து வருவதால், இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, சிறிய பிரச்சனைகளுக்காக மாணவர்களாகிய நீங்கள் தற்கொலை செய்து கொள்வதால், நாளடைவில் நாட்டின் முதல்வராகவோ, தலைமை செயலாளராகவோ, விஞ்ஞானியாகவோ, காவல்துறை டி.ஜி.பி-யாகவோ ஆக வாய்ப்பு இருப்பதை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களாகிய நீங்களே உங்களது பெற்றோர்களின் எதிர்காலமாக இருப்பதாகவும், சிறு பிரச்சனைக்காக திடீரென உயிரை மாய்த்து கொள்வதால் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை நினைத்து பார்க்க வேண்டும் எனவுன் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மாணவர்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளரை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுகொள்ளலாம் எனவும் அல்லது 1098 என்ற தற்கொலை தடுப்பு உதவி மைய எண் மற்றும் 9152987821 என்ற உதவி எண்னை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வேண்டும் எனவும் டி.ஜி.பி சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com