10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு

தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், 6 ஐ.ஜி-க்கள் ஏ.டி.ஜி.பி-க்களாக பதவி உயர்வும் பெற்றுள்ளனர்.
10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று தமிழக காவல்துறையைச் சேர்ந்த 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 10 பேரை பணியிடமாற்றம் செய்தும், ஐ.ஜி-க்களாக இருந்த 6 அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பி-க்களாகவும், ஒரு அதிகாரிக்கு ஐ.ஜி-யாகவும் பதவி உயர்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக மத்திய அரசுப் பணியில் இருந்து வந்த அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் மதுரை தென் மண்டல ஐ.ஜி-யாகவும், ஏற்கனவே அந்த பதவியில் இருந்த அன்பு ஐ.பி.எஸ் சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஐ.பி.எஸ் சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி-யாகவும், அந்த பதவியில் ஏற்கனவே இருந்த சந்தோஷ் குமார் ஐ.பி.எஸ் திருநெல்வேலி காவல் ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் பொறுப்பு வகித்த செந்தில் குமார் ஐ.பி.எஸ் மதுரை காவல் ஆணையராகவும், திருநெல்வேலி காவல் ஆணையர் துரை குமார் ஐ.பி.எஸ் சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி-யாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஊர்க்காவல் படை ஐ.ஜி பொறுப்பு வகித்து வந்த வனிதா ஐ.பி.ஏஸ் ஏ.டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்று சென்னை ரயில்வே ஏ.டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். காவலர் நலத்துறை ஐ.ஜி மல்லிகா ஐ.பி.எஸ் சென்னை விரிவாக்கப் பிரிவு ஐ.ஜி-யாகவும், அயல்பணியில் இருந்து வந்த பால நாக தேவி ஐ.பி.எஸ் சென்னை செயலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி-யாகவும், ஜெயராமன் ஐ.பி.எஸ் ஊர் காவல்படை ஏ.டி.ஜி.பி மற்றும் கூடுதல் கமாண்டண்டாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவலர் நலத்துறை உதவி ஐ.ஜி-யாக இருந்த சம்பத் குமார் ஐ.பி.எஸ்-க்கு அதே துறையில் ஐ.ஜி-யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல அயல் பணிகளில் இருந்து வந்த அயுஷ் மணி திவாரி ஐ.பி.எஸ், மகேஷ்வர் தயால் ஐ.பி.எஸ், சுமித் சரண் ஐ.பி.எஸ், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி அபின் தினேஷ் மொடாக், சென்னை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி சஞ்சய் குமார் ஐ.பி.எஸ், சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் ஐ.பி.எஸ் ஆகியோருக்கு ஐ.ஜி-யில் இருந்து ஏ.டி.ஜி.பி-க்களக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com