விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்

சாா்ஜா, துபாய் நாடுகளிலிருந்து சென்னை வந்த விமானங்களில் ரூ.1.15 கோடி மதிப்புடைய 1.8 கிலோ தங்கம் மற்றும் மின்னணு சாதனங்களை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர்.
விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு வழக்கம் போல் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அந்த விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றாா். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை திருப்பி அழைத்து வந்து சோதனையிட்டனர். அப்போது அவருடைய சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த மின்னணு சாதனப் பொருட்களை கைப்பற்றினா்.

மேலும் அதற்குள் 300 கிராம் எடையுடைய தங்க கட்டி ஒன்றும் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த தங்கக்கட்டியின் மதிப்பு ரூ.15 லட்சம் என கூறப்படும் நிலையில், அவரிடமிருந்த மின்னணு சாதனப்பொருட்களின் மதிப்பு ரூ.26 லட்சம் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரூ.41 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம், மின்னணு சாதனப்பொருட்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனா்.

இந்நிலையில் துபாயில் இருந்து இண்டிகோ விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த 29 வயது ஆண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவருடைய உள்ளாடைக்குள் 2 பாா்சல்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனா். பின்னர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com