வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபர் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது நாளை புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக, அந்தமான் நிக்கோபார் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அந்தமான் நிக்கோபர் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் வரும் 22ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 100 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். 6 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.